முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஆபாச காணொளியில் இருக்கும் ஹாசிக்கைச் சந்தித்தேன் – அஸ்மினின் அரசியல் செயலாலர்
முதன்மைச் செய்திகள்

ஆபாச காணொளியில் இருக்கும் ஹாசிக்கைச் சந்தித்தேன் – அஸ்மினின் அரசியல் செயலாலர்

புத்ராஜெயா, ஜூன்.13-

அமைச்சர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக காணொளி வழி,  வாக்குமூலம் அளித்துள்ள மூலத்தொழில்துறை துணை அமைச்சரின் மூத்த அந்தரங்க செயலாளர் ஹாசிக் அப்துல்லாவை தாம் சந்தித்ததை டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர் ஹில்மான் இடாம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வாக்குமூலம் காணொளி வெளியிடப்படும் முன்னர் புத்ராஜெயாவில் உள்ள மரியோட் தங்கும் விடுதியில் ஹில்மான் தம்மை சந்தித்ததாக ஹாசிக் இன்று மதியம் முகநூலில் தெரிவித்திருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியப்போது ஹாசிக்கை தாம் சந்தித்தது உண்மை என ஹில்மான் தெரிவித்தார்.

அந்த காணொளியில் அஸ்மின் சம்பந்தப்பட்டுள்ளதை மறுத்து கூறும்படி ஹில்மான் தம்மை கேட்டுக் கொண்டதாக ஹாசிக் குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும் ஹாசிக்கின் குற்றச்சாட்டு குறித்து ஹில்மான் கருத்துரைக்க மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பில் தாம் போலீஸ் புகார் செய்திருப்பதால் , அது குறித்து தம்மால் மேலும் பேச இயலாது என ஹில்மான் தெரிவித்தார்.

அந்த காணொளி தொடர்பில் பொய்யுரைக்குமாறு ஹில்மான் தம்மைக் கேட்டு கொண்டதாக ஹாசிக் தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து சிந்திக்க தமக்கு அவகாசம் வேண்டும் என்று ஹாசிக் தெரிவித்துள்ளார். இதனால் ஹில்மான் அதிருப்தி அடைந்ததாகவும் , இன்னும் 48 மணி நேரத்தில் இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பது தெரியும் என்று தம்மிடம் கூறியதாகவும் ஹாசிக் கூறியுள்ளார்.

முன்னதாக புத்ராஜெயாவில் இருக்கும் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய துறையின் அலுவலகத்திலும் புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்திலும் , அந்த ஆபாச காணொளி குறித்து ஹில்மான் புகார் செய்தார்.  இந்த விவகாரத்தில் பி.கே.ஆர். அனைத்து தரப்புக்கு முழு ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன