முகப்பு > முதன்மைச் செய்திகள் > அந்தரங்க செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் ஹாசிக் !
முதன்மைச் செய்திகள்

அந்தரங்க செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் ஹாசிக் !

புத்ராஜெயா, ஜூன்.13-

மூலத்தொழில்துறை துணை அமைச்சரின் மூத்த அந்தரங்க செயலாளர் பொறுப்பில் இருந்து ஹாசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் ஷம்சூல் இஸ்காண்டார் அகின் வியாழக்கிழமை அறிவித்தார்.

ஆபாச காணொளியில் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி வாக்குமூலம் வெளியிட்டுள்ள, ஹாசிக் அப்துல் அசிசிற்கு கடந்த ஜூன் 12 ஆம் தேதி காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஷம்சூல் கூறினார். மூன்று நாட்களில் அதற்கு பதில் அளிக்கத் தவறும் பட்சத்தில் அவர் நிரந்தரமாக தமது பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என ஷம்சூல் எச்சரித்தார்.

எந்த ஒரு தனிநபர் அல்லது அரசியல்வாதியை களங்கப்படுத்தும் கீழ்தரமான அரசியலை தாம் முற்றாக ஒதுக்குவதாக ஷம்சூல் தெரிவித்தார். அரசியல் நோக்கத்துக்காக சில தரப்பினர் இத்தகைய மலிவான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஷம்சூல் மேலும் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன