முகப்பு > விளையாட்டு > பத்துமலை இந்தியர் நற்பணி மன்றத்தின் 8 ஆம் ஆண்டு அன்னையர் தந்தையர் தின விழா
விளையாட்டு

பத்துமலை இந்தியர் நற்பணி மன்றத்தின் 8 ஆம் ஆண்டு அன்னையர் தந்தையர் தின விழா

கோலாலம்பூர் ஜூன் 13-

பத்துமலை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் 8ஆம் ஆண்டு அன்னையர் தந்தையர் தின விழா வரும் 15 ஆம் தேதி மாலை 7.01 மணிக்கு பத்துமலை தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற உள்ளது.

பெற்றோர்களே கண் கண்ட தெய்வம் என சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. பெற்றோரின் அர்ப்பணிப்பு விலை மதிக்க முடியாதது என்றால் அது மிகையாகாது. அதன் அடிப்படையில் பெற்றோர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது பொருட்டு சிறந்த பெற்றோர்களை தேர்வு செய்து சிறப்பு செய்யப்பட உள்ளது என்று பத்துமலை நற்பணி மன்றத்தின் தலைவர் வை. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

மேலும் இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதவிருக்கும் 1000 இந்திய மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி நூல் வழங்க ‌‌உள்ளதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன