ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > செலாயாங் நகராண்மைக்கழகத்தின் செயல்பாட்டில் தேவஸ்தானம் அதிருப்தி!
சமூகம்முதன்மைச் செய்திகள்

செலாயாங் நகராண்மைக்கழகத்தின் செயல்பாட்டில் தேவஸ்தானம் அதிருப்தி!

பத்துகேவ்ஸ், ஜூன் 13-

பத்து மலை தமிழ் பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அசுத்தமாக இருப்பதைக் கண்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கூட பிரதான வாசல் மட்டுமின்றி இரயில் நிலையத்ததைச் சுற்றியும் செலாயாங் நகராண்மைக்கழகம் கண்டுகொள்வதில்லை என ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் வெளிட்டுள்ள அறிக்கையில் அதன் பொதுத்தொடர்பு வியூக இயக்குனர் திரு. சிவகுமார் கூறினார்.

நகராண்மைக்கழகம் சரியான முறையில் சுற்றுப்புறத்தை பராமரிக்காததால் இவ்விடங்களைச் சுற்றி குப்பைக் கூளங்களும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. இதனால் தூய்மைக்கேடு மட்டுமின்றி கொசு மற்றும் எலி போன்றவற்றால் சுகாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் இவ்விடங்களில் நகராண்மைக்கழகம் குப்பை தொட்டி வைப்பதில்லை, கூட்டி சுத்தம் செய்வதில்லை என்றும் கூறினார். இதனால் இரயில் சேவையை பயன்படுத்தும் சுற்றுப்பயணிகளும் பொதுமக்களும் பல சங்கடங்களுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் பல முறை தேவஸ்தானத்திடம் புகார்களும் அளித்துள்ளனர்.

டெங்கி காய்ச்சல் போன்ற சம்பவங்கள் ஏதும் நிகழ்வதற்கு முன் செலாயாங் நகராண்மைக்கழகம் விரைந்து செயலாற்ற வேண்டும் என திரு. சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

பத்து மலை திருத்தலமும் பத்து மலை தமிழ் பள்ளியும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் பத்து மலை திருத்தலம் உலக பாரம்பரிய தள அங்கீகாரம் பெற்ற மிக முக்கியமான சுற்றுலா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர் இரட்டை கோபுரம் மற்றும் கோலாலம்பூர் கோபுரதிற்கு அடுத்து மிகவும் அதிமான சுற்றுப்பயணிகளை கவர்ந்த இடந்தமாகவும் திகழ்கிறது. இங்கு வார நாட்களில் ஏறக்குறைய 3,000 பேர்களும் வார இறுதி நாட்களில் ஏறக்குறைய 5,000 பேர்களும் வந்து போகின்றனர். ஆகவே, செலாயாங் நகராண்மைக்கழகம் விரைந்து செயலாற்றி சுத்தத்தை பேண வேண்டும் எனவும் திரு. சிவகுமார் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன