ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > தேசிய போலீஸ் படைத் தலைவரின் கருத்தில் உடன்படுகிறேன்! – சமூக நல அமைச்சர் பொன். வேதமூர்த்தி
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தேசிய போலீஸ் படைத் தலைவரின் கருத்தில் உடன்படுகிறேன்! – சமூக நல அமைச்சர் பொன். வேதமூர்த்தி

கோத்தா பாரு, ஜூன் 13-

இன, சமய பிரச்சினைகளைக் கையாளுவதில் அரசியல்வாதிகளுக்கு கடப்பாடு உண்டென்று தேசிய காவல் படைத் தலைவர் அப்துல் ஹமிட் பாடோர் வெளிப்படுத்திய கருத்தில் தனக்கு முழு உடன்பாடு உண்டென்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

திறந்த மனப்பான்மை, சகிப்புத்தன்மை மற்றும் ஈடுபாடு ஆகிய தன்மைகளால் கட்டியெழுப்பப்பட்ட தேச ஒற்றுமை கடந்த காலத்தில் மற்ற நாடுகளால் வியப்புடன் உற்று நோக்கப்பட்டது.

அப்படிப்பட்ட ஒற்றுமை உணர்வு கடந்த ஒரு தலைமுறைக் காலத்தில், குறிப்பாக தீபகற்ப மலேசியாவில் சிதைந்து வருகிறது. சந்தேகத்தையும் விரோத மனப்பான்மையையும் துணை கொண்டு இன-சமய அரசியலை கையிலெடுக்கும் போக்கு தற்காலத் தலைவர்களிடையே மிகுந்து வருகிறது. இத்தகைய சுயநலப் போக்கால் இன்றைய கூட்டு சமுதாயத்தில் பன்முகப் போக்கும் இன-சமய முறுகல் நிலையும் தோன்றியுள்ளன.

இத்தகையப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதேவேளையில் இன-சமய-பாலின அடிப்படையிலான பாகுபாடும் பெருகி வருகிறது. அத்துடன், பழி வாங்கும் போக்கு, சட்டத்தை மீறிய வல்லடியான அணுகுமுறையும் தென்படுகின்றன.

இதை யெல்லாம் பொது மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர். தற்பொழுது புதிய ஆட்சி நடைபெற்று வரும் வேளையில், ஆழமாக வேர்விட்டுவிட்ட சமூக சீர்கேடுகளைக் களைய மத்தியக் கூட்டரசும் பொருத்தமான வழிவகைபற்றி ஆராய்ந்து வருகிறது.

நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் ஓங்கினால்தான் பொதுமக்களும் மனம் மகிழ்ந்து நாட்டு வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தத்தம் பங்கு குறித்து இன்னும் ஆழமாக சிந்திக்க முற்படுவர் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர்அங்கு சிகிச்சை பெறும் பூர்வகுடி மக்களின் நிலைமையைப் பற்றிகேட்டறிந்தார்மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செலசாவதியும் மருத்துவர் நோர் அஸ்னியும் விளக்கம் அளித்தனர்.

குறிப்பாகஅவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் நஸ்ரி ரோஸ்லியைப் பார்வையிட்டபோதுஅந்த மூன்று வயதுசிறுவனின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன