வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஸ்ரீ அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலய அடிக்கல் நாட்டு விழா!
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஸ்ரீ அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலய அடிக்கல் நாட்டு விழா!

சௌஜானா புத்ரா, ஜூன் 13-

சிலாங்கூர் பண்டார் சௌஜானா புத்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் இருக்கும் ஸ்ரீ அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா ஜூன் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற இருப்பதாக அதன் நிர்வாக தலைவர் சிவக்குமார் தெரிவித்தார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மனிதநேய மாமணி ரத்னாவள்ளி அம்மையார் கலந்து கொள்கின்றார்.

இந்த வட்டாரத்தில் ஓர் இந்து ஆலயம் இல்லை என்பது சுற்றுவட்டாரத்தில் குடியிருக்கும் இந்தியர்களின் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இங்கு ஆலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திடம் நிலத்தை விண்ணப்பித்து அதனை வெற்றிகரமாக பெற்று இருக்கிறோம் என்றார் அவர்.

இன்று இங்கு நம்முடைய ஆலயத்திற்குச் சொந்தமான நிலம் இருக்கின்றது. இதில் ஆலயத்தை அமைப்பது மட்டும் தான் நம்முடைய கடமையாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடங்கி மாலை 5 மணி வரை இந்த ஆலயத்தில் அடிக்கல் நாட்டு விழா வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஒரு சிவன் ஆலயத்தை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான நடவடிக்கை அல்ல. அந்த வகையில் அதை ஏற்பாடு செய்திருக்கும் எங்களது நிர்வாகத்திற்கு நாடு தழுவிய நிலையில் உள்ள மக்களின் ஆதரவு மிக முக்கியமானதாக தேவைப்படுவதாகவும் சிவக்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் உட்பட மேலும் பல பிரமுகர்கள் வருகை புரிவார்கள். மேல் விவரங்களுக்கு 012-3916605 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன