திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஆபாச காணொளித் தொடர்பில் எம்.சி.எம்.சி விசாரணையில் துரிதம் !
முதன்மைச் செய்திகள்

ஆபாச காணொளித் தொடர்பில் எம்.சி.எம்.சி விசாரணையில் துரிதம் !

சைபர்ஜெயா, ஜூன்.14 –

பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி பரப்பப்படும் ஆபாச காணொளி தொடர்பில் , எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தகவல் மற்றும் பல்லூடக ஆணையம் தனது விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் அல்-இஷால் இஷாக் தெரிவித்துள்ளார். எம்.சி.எம்.சி தற்போது மேற்கொண்டு விசாரணைகளைக் காட்டிலும் இந்த காணொளித் தொடர்பான விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அல்-இஷால் தெரிவித்தார்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இணையக் குற்றச்செயல் குழுவுடன் இணைந்து எம்.சி.எம்.சி விசாரணையை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். சைபர்ஜெயாவில் வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பயனீட்டாளர்கள் நலன் தொடர்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிகழ்ச்சியில் அல்-இஷால் இதனைத் தெரிவித்தார்.

அந்த ஆபாச காணொளியைப் பார்க்கும்போது அது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு காணொளி என்பது உறுதியாகி இருப்பதாக அல்-இஷால் கூறினார். எனினும் மலேசியர்கள் அத்தகைய ஆபாச காணொளிகளை சமூக ஊடங்களில் பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தகையைப் பிரச்சினைகளைத் தீர்க்க இலக்கவியல் அடையாள எண் மட்டுமே ஒரு தீர்வாக இருக்கும் என அல்-இஷால் மேலும் தெரிவித்தார். இதன் தொடர்பான ஆய்வுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதையும் அவர் சுட்டி காட்டினார். நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில் போலி கணக்குகளின் மூலம் அவதூறுகள் பரப்பும் செயல் அதிகரித்திருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன