முகப்பு > முதன்மைச் செய்திகள் > அஸ்மின் அலிக்கு எதிராக பி.கே.ஆர் கட்சியில் சதி !
முதன்மைச் செய்திகள்

அஸ்மின் அலிக்கு எதிராக பி.கே.ஆர் கட்சியில் சதி !

கோலாலம்பூர், ஜூன்.14

பி.கே.ஆர் கட்சியில் அதன் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலிக்கு எதிராக மிகப் பெரிய சதி தீட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சபா மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவர்  பிலிசோன் சைனுடின் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சதி கட்சிக்குள் இருந்தே அரங்கேற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பி.கே.ஆர் கட்சியின் இரண்டாம் நிலை தலைவரான அஸ்மின் அலி மீது ஹாசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தாலும் அவர் இன்னமும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை பிலிசோன் சுட்டி காட்டினார். இதனால் கட்சியில் அஸ்மின் அலிக்கு எதிராக சதி தீட்டப்படுகிறது என்பதை தம்மால் உணர முடிகிறது என அவர் மேலும் கூறினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எந்த ஒரு தலைவரின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், பி.கே.ஆர் கட்சித் தேர்தலின்போது ஹாசிக், ரபிசி ரம்லி அணியுடன் அணுக்கமாக இருந்ததாக பிலிசோன் தெரிவித்தார். இதற்கு முன்னர் தேசிய முன்னணியில் இருந்த ஹாசிக் , கடந்த ஆண்டில்தான் பி.கே.ஆரில் இணைந்ததாகவும் பிலிசோன் தெரிவித்தார்.

கட்சியில் புதிதாக இணைந்திருந்தாலும் , சந்துபோங் தொகுதியில் இளைஞர் பிரிவின் தலைவர் பதவிக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கபட்டதையும் பிலிசோன் சுட்டி காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன