முகப்பு > அரசியல் > பாத்தே பூர்வகுடி கிராமம்: துணைப் பிரதமரும் சமூக நல அமைச்சரும் மக்கள் நலப்பணி ஆற்றினர்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பாத்தே பூர்வகுடி கிராமம்: துணைப் பிரதமரும் சமூக நல அமைச்சரும் மக்கள் நலப்பணி ஆற்றினர்

கோத்தா பாரு, ஜூன் 14-

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசீசாவும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வேதமூர்த்தியும் இன்று காலையில் ‘ஏரிங்10 ஃபெல்டா’வைச் சேர்ந்த பாத்தே பூர்வகுடி மக்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கினர்.

முன்னதாக துணைப் பிரதமரும் பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியும் கோல கோ கிராமத்தைச் சேர்ந்த பாத்தே பூர்வகுடி மக்கள் மரணம் தொடர்பாக நடைபெற்ற அரசுசார் அமைப்புகளுடனான விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பூர்வகுடி மக்கள் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட அரச அமைப்புகளின் சார்பில் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு வாணிகம் மற்றும பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹசானுடின் ஹசான் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மாத இடைவெளியில் கோல கோ கிராமத்தில் இறந்த 14 பேரில் இருவரின் உடல்மீது நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் நிமோனியா என்னும் கபவாத நோய்தான் இந்த மரணத்திற்கெல்லாம் காரணம் என்று சுகாதாரத் துறை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் உடற்கூறு ஆய்வின் முழுமையான அறிக்கைக்குப் பின்னர்தான் இது குறித்து சரியாகத் தெரியவரும்.

இந்த சுகாதார சிக்கல் காரணமாக இதுவரை பாத்தே சமூகத்தைச் சேர்ந்த 99 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் கோல கெராய் மருத்துவமனையிலும் கோத்தா பாரு ராஜா பெரம்புவான் ஜைனாப்-2 மருத்துவமனையிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் நால்வர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன