வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > விடியற்காலையில் தீ விபத்து; கணவன் மனைவி மற்றும் மகன் பலி
குற்றவியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

விடியற்காலையில் தீ விபத்து; கணவன் மனைவி மற்றும் மகன் பலி

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14-

பெட்டாலிங் ஜெயாவில்  கம்போங் லின்டோங்கானில் இரட்டை மாடி வீடு ஒன்றில் விடியற்காலை மணி  2.45 அளவில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாண்டனர்.

கே கந்தசாமி (வயது 62) அவரது மனைவி எஸ் ஜெயலட்சுமி (வயது  59 )அவர்களது மகன் கணபதி (வயது 32) ஆகியோர் தீ விபத்தில் மரணம் அடைந்தனர்.

அந்த இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் கந்தசாமியும் கணபதியும் இறந்து கிடந்தனர். தீ பரவியதாக நம்பப்படும் கீழ்த்தளத்தில் ஜெயலட்சுமி கருகிய உடல் மீட்கப்பட்டதாக தீயணைப்பு மீட்புப் படையின் அதிகாரி  அனுவார் ஹருன் தெரிவித்தார். இவ்வாண்டு நவம்பர் மாதம் கணபதியின் நிச்சயதார்த்தமும் அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அவரது திருமணம் நடைபெறுவதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.

கந்தசாமியும் கணபதியும் தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக சுவாசிக்க முடியாமல் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது .இந்த வீட்டின் பின்புறம் வெளியேறுவதற்கு கதவு இல்லை என அனுவார் ஹருன்  தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன