பாலியல் காணொளி விவகாரம்  பி கே ஆர் துணிச்சலானவிசாரணையை மேற்கொள்ள வேண்டும் -அஸ்மின் அலி

0
18

கோலாலம்பூர், ஜூன் 16-

தம்மை தொடர்புபடுத்தி வெளியான பாலியல் காணொளி விவகாரத்தில்  கட்சிக்குள் ஒரு தரப்பு சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு துணிச்சலான முடிவை எடுப்பதற்கு பி.கே.ஆர் தலைமைத்துவம் தயங்கக் கூடாது என அக்கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி வலியுறுத்தினார்.

பி கே ஆர் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களின் கைத்தொலைபேசி எண்கள் மூலமாக இந்த காணொளி சென்றிருக்கிறது .சம்பந்தப்பட்ட நபர் அல்லது குழுவினர் கட்சிக்குள் முக்கிய பொறுப்புகளை வகிப்பதாகவும் அஸ்வின் தெரிவித்தார்.

இந்தப் பாலியல் காணொளி காட்சி முகநூல் அல்லது இன்ஸ்டாகிராமில் விநியோகிக்கப்படவில்லை. .அவர்களது அடையாள முகவரி கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதை  தவிர்ப்பதற்காக அவர்கள் இந்த யுக்தியை மேற்கொண்டதாக   கோம்பாக்கில்  நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அஸ்மின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாட்ஸ்ஆப்  குழுமத்தின் மூலம் இவர்கள் இந்த காணொளியை விநியோகித்துள்ளனர். இந்த குழுமத்தில் இடம்பெற்றிருந்த பி.கே .ஆர் டிவிஷன் தலைவர்கள் மற்றும் டிவிசனின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோரின் கைத்தொலைபேசியில் வாட்ஸ்அப்  மூலமாக இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

நேற்று இரவு  டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் இருந்து அஷிக் அப்துல் அஜீஸ் வெளியேறியபோது பி கே ஆர் கட்சியின் சில தலைவர்களும் அவருடன் காணப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவலைத்

தொடர்ந்து இந்த பாலியல் காணொளி விவகாரத்தில் கட்சியில் சில தரப்பினருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என ஆருடங்கள் வெளியாகியுள்ளன.

அஷிக்கிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் போலீஸ் அவரை ஜாமீனில் விடுவித்தது. புதன்கிழமையன்று பி .கே .ஆர் கட்சியின் அரசியல் விவகார பிரிவு கூட்டத்திற்கு தலைமை ஏற்ற அக் கட்சியின் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தமது துணைத் தலைவருக்கு ஆதரவு தெரிவித்ததோடு அவரை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட பாலியல் காணொளியை கடுமையாக சாடினார். எனினும் அந்த கூட்டத்தில் அஸ்வின் கலந்து கொள்ளவில்லை

இந்தக் காணொளி  வெளியானது தொடர்பில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த வேண்டுமென  முதல் முறையாக பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின் அலி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முடிவு எடுக்கும் உரிமையை கட்சித் தலைமைத்துவத்தின் முடிவுக்கு  விட்டுவிட்டதாக அவர் சொன்னார். எனினும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு கட்சியின் தலைமைத்துவம் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

சபா சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவின் அனைத்து நிலைகளிலும் சேர்ந்த பி.கே.ஆர் தலைவர்கள் அந்த குறுந்தகவல் குழுமத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இதனிடையே  இந்த காணொளி விவகாரத்தில் தமது ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவதை டத்தோ ஶ்ரீ அன்வார் மறுத்தார் .மேலும் கட்சிக்கு அஸ்மின் ஒரு மிரட்டலாக இல்லை என்றும் அவர் சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடும் புகார் செய்வீர்களா என அஸ்மினிடம் வினவப்பட்டபோது சம்மந்தப்பட்ட அமைப்புகளிடம் தாம் புகார் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். நான் எனது பங்கை செய்துவிட்டேன் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அதிகாரிகள் தங்களது விசாரணையை மேற்கொள்ளட்டும் என்று அஸ்மின் அலி மறுமொழி தெரிவித்தார்.