அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கோல கோ பூர்வகுடி கிராம அவலம் தொடர்கிறது; மர்ம நோய் மரண எண்ணிக்கை 15-ஐ தொட்டது
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

கோல கோ பூர்வகுடி கிராம அவலம் தொடர்கிறது; மர்ம நோய் மரண எண்ணிக்கை 15-ஐ தொட்டது

புத்ராஜெயா, ஜூன் 17-

குவா மூசாங், கோல கோ பூர்வ குடி கிராமத்தில் பரவியுள்ள மர்ம நோய்க்கு கடைசியாக மூன்று வயது சிறுவனும் பலியாகி உள்ளான்.

கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரம்புவான் ஜைனாப் -2 மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நஸ்ரி த/பெ ரோஸ்லி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 16-ஆம் நாள் இறந்து விட்டதாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ மனையின் தடயவியல் பிரிவு உடற்கூறாய்வு மேற்கொள்-கின்ற நிலையில், அந்த அறிக்கை வெளியான பின்னர்தான் சம்பந்தப்-பட்ட சிறுவனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும்.

இதற்கிடையில், பூர்வகுடி சமூக மேம்பாட்டுப் பிரிவு(ஜகோவா), நஸ்ரியின் குடும்பத்திற்கு தேவையான உதவியை அளிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களும் பணியாளர்களும் அதிகபட்சமாக போராடியும் ராஜா பெரம்புவான் ஜைனாப் -2 மருத்துவ மனையில் உயிர் நீத்த நஸ்ரியின் கூடும்பத்திற்கு இந்த வேளையில் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன