அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > 29 தமிழ் பள்ளிக்கூடங்களுக்கு யூபிஎஸ்ஆர் பயிற்சி புத்தகங்கள் அன்பளிப்பு
சமூகம்முதன்மைச் செய்திகள்

29 தமிழ் பள்ளிக்கூடங்களுக்கு யூபிஎஸ்ஆர் பயிற்சி புத்தகங்கள் அன்பளிப்பு

கோலாலம்பூர் ஜூன் 18- இருபத்தொன்பது தமிழ் பள்ளிகள் RM 45,000. மதிப்புள்ள யூபிஎஸ்ஆர் பயிற்சி புத்தகங்களை பெற்றுக்கொண்டன.

 

கடந்த சனிக்கிழமை பத்துதமிழ் பள்ளியில் பத்து மலை நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர அன்னையர் தந்தையர் தின விழாவில் இப்புத்தகங்கள் வழங்கப்பட்டன என ஸ்ரீ மகா மாரியம்மன்  தேவஸ்தானத்தின் பொதுத் தொடர்பு வியூக இயக்குனர் திரு. சிவகுமார் கூறினார்.

 

நற்பணி மன்றத்தின் தலைவர் திரு. V. கிரிஷ்ணமூர்த்தி, தமது உரையில் இந்த நிகழ்ச்சி 8ஆவது முறையாக வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அணைத்து உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார் எனவும் திரு. சிவகுமார் குறிப்பிட்டார்.

 

கோலாலம்பூர், சிலாங்கூர், பேரா, பினாங்கு ஆகிய மாநிலங்களிலிருந்து தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்சியில் கலந்து நேரடியாக பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

 

இந்நிகழ்சியில் சிறப்பு வருகையாளர்களாகக் கலந்துக்கொண்ட நல்லுள்ளங்கள் நன்கொடைகளையும் கல்வியில் சிறந்த மாணவர்ளுக்கு ரொக்கப்பரிசுகளையும் வழங்கினர்.

 

இந்த நிகழ்ச்சியை செந்தூல் வட்டார காவல்துறை தலைவர் உதவி ஆணையர் ஏசிபி சண்முகமூர்த்தி அவர்கள் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து, யூபிஎஸ்ஆர் பயிற்சி புத்தகங்களை எடுத்து வழங்கினார்.

நற்பணி மன்றத்தின் தலைவரான திரு. கிருஷ்னமூர்த்தி,  ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவளரும் ஆவார். நற்பணி மன்றத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் தேவஸ்தானம் இவ்வாண்டு RM 5,000. வழங்கி உதவியதற்கு தம்முடைய நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் எனவும் திரு. சிவகுமார் கூறினார். அதற்கான காசோலையை தேவஸ்தானத்தின் பொருளாளரும் அறங்காவலருமான திரு.அழகன் வழங்கினார்.

 

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம் மற்றும் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி ஆலயம் ஆகிய மூன்று கோயில்களையும், பத்துமலை தமிழ் பள்ளி மற்றும் அப்பர் தமிழ் பள்ளி ஆகிய இரண்டு தமிழ் பள்ளிகளையும் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் திரு. சிவகுமார் குறிப்பிடுகையில், பத்துமலை நற்பணி மன்றம் சமூக நலப் பணிகளுக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் முழு ஆதரவைப்பெற்று இயங்கி வருவதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன