அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எம்.ஏ.எப். தலைவர் பதவிக்கு டத்தோ எஸ்.எம். முத்து போட்டி!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

எம்.ஏ.எப். தலைவர் பதவிக்கு டத்தோ எஸ்.எம். முத்து போட்டி!

பெட்டாலிங் ஜெயா ஜுன் 18-

எம். ஏ.எப். எனப்படும் மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் 16ஆவது தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதி விஸ்மா ஒ.சி.எம்மில் நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் இம்முறை நடப்பு தலைவர் டத்தோ கரிம் இப்ராஹிம் அவர்களை எதிர்த்து நடப்பு துணைத் தலைவரான டத்தோ எஸ்.எம். முத்து போட்டியிடுகிறார்.

மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 10 சங்கங்கள் தங்களது வேட்பாளர்களை முன்மொழிந்துள்ளனர். டத்தோ கரிம் இப்ராகஹிம் 2 தவணை மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தலைவராக இருந்து உள்ளதோடு துணைத் தலைவர் செயலாளர் உட்பட கடந்த 25 ஆண்டு காலம் அந்த அமைப்பில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.

மலேசிய ஓட்டப்பந்தய சம்மேனனத்திற்குபுதிய தலைமைத்துவம் வேண்டும் என அதன் உறுப்பு சங்கங்கள் விரும்புவதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அவர்கள் தலைவர் பதவி உட்பட அனைத்து பதவிகளுக்கும் புதுமுகங்களை முன்மொழிந்துள்ளனர். விளையாட்டுத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்டவரான எஸ்.எம். முத்து பெட்டாலிங் ஜெயா கால்பந்து சங்கம் , சிலாங்கூர்

ஓட்டப் பந்தய சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வந்துள்ளார். மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளன துணைத்தலைவராக இருந்து வரும் எஸ்.எம். முத்து ஓட்டப்பந்தய துறைக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு அதிகமான இந்திய இளைஞர்கள் மீண்டும் ஓட்டப்பந்தயத் துறைக்கு திரும்பி சாதனை புரிய வேண்டும் என்ற இலக்கை நோக்கி பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

டத்தோ கரீம் நீண்ட காலமாக மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தில் பல்வேறு பதவிகளில் இருந்து வருவதால் இம்முறை தாம் அவரை எதிர்த்து போட்டியிடுவதாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ எஸ்.எம். முத்து தெரிவித்தார்.

துணைத்தலைவர் பதவிக்கு டத்தோ மும்தாஸ் ஜபாரும் டத்தோ ஷஹிடான் காசிமும் போட்டியிடுகின்றனர் . நான்கு உதவித் தலைவர் பதவிக்காக எம் ஐயாரு, ரஜிமா ஷேய்க் அகமட், முகமட் அவாங், வி.மதிவானன், வில்லியம் லிங், டத்தோ ஆர். அண்ணாமலை, பாட்ஷீல் அபு பாக்கார், ஜோசபின் கான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே டத்தோ எஸ்.எம். முத்து தமக்கு நல்ல நண்பர் என்பதோடு அவர் தம்மை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக கரிம் கூறினார். எனினும் ஓட்டப்பந்தய வீரர்களின் நலன்களுக்காக போட்டியிடும் அனைவரும் பாடுபட வேண்டும் என்பதுதான் முக்கியம் என அவர் சொன்னார். மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தேர்தல் சுமுகமாகவும் நட்புணர்வுடனும் நடைபெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன