அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் இரண்டாவது வெற்றி
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் இரண்டாவது வெற்றி

கோலாலம்பூர், ஜூன் 18-

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷனின் இரண்டாவது தயாரிப்பாக வெளியாகியிருக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. ஒரு யூடியூப் சேனல் வைத்துக் கொண்டு பிரபலமாக முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் ரியோவும் ஆர்ஜே விக்னேஷ் காந்தும்.

இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில், ஜூன் 15ஆம் தேதி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இப்படம் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இதை அனைவரும் வெகுவாக ரசித்தனர். மேலும், இப்படத்தில் உள்ள சமூக கருத்தைப் பாராட்டினர். கனா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படமும் நல்ல வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

யூடியூபில் பிரபலமான ரியோ ராஜ் இந்த படத்தில் காமெடி கலந்த நாயகன் வேடத்தை ஏற்றுள்ளார். ஓரிரு காட்சிகள் தவிர நடிப்புக்கும் இவருக்கும் ரொம்ப தூரம் போல் தெரிகிறது. குறிப்பாக செண்டிமெண்ட், ரொமான்ஸ் காட்சிகளில் வழிகிறார்.

நாஞ்சில் சம்பத் வரும் காட்சிகளில் தியேட்டரே கலகலக்கின்றது. ஒரு மாநிலத்தில் இரண்டு முதலமைச்சர்கள் இருக்கும்போது ஒரு தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் இருக்கக்கூடாதா? போன்ற கிண்டலான கேள்விகளும், இனிமேல் ஓட்டு போடுபவர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை, ஓட்டு எண்ணுபவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று வருங்கால அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் அறிவுரையும் காமெடியின் உச்சகட்டம். இந்த திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன