அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சமூகத்தளங்களில் வைரலாகும் சோக்கா பாடல்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சமூகத்தளங்களில் வைரலாகும் சோக்கா பாடல்!

கோலாலம்பூர், ஜூன் 18-

ஜி.வி. கதிர் இயக்கத்தில் மலேசியாவின் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் வலைதள படமான இரவா காதல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சோக்கா பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஸ்டீபன் சகரியா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை மலேசிய ரசிகர்கள் தங்கள் சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சோக்கா…. என்னை கழட்டி விட்டு போனாளே… எனத் தொடங்கும் இப்பாடல் இரவா காதல் வலைதள படத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்து உள்ளது.

தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே என்ற பாடல் மூலம் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டவர் ஸ்டீபன் சகரியா. டிக் டாக் போன்ற சமூக தளங்களில் இந்தப் பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. யூடியூப் பக்கத்திலும் பல மில்லியன் பார்வையாளர்களை இப்பாடல் கவர்ந்தது. அந்த வரிசையில் சோக்கா பாடலும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டே நாட்களில் 51,000 பார்வையாளர்களை இப்பாடல் கவர்ந்துள்ளது.

இன்னும் திரைக்கு வராத என்னவளே திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய ஜி.வி. கதிர், இரவா காதல் வலைப்படத்தை இயக்குகிறார். இப்படம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வலைத்தளத்தில் வெளியிடப்படும் முதல் மலேசிய திரைப்படம் என்ற பெருமையை இரவா காதல் கொண்டுள்ளது.

அதுவே இப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. 14 நாட்கள் இடைவிடாத படப்பிடிப்பிற்கு பிறகு ளாவது நாள் இப்படம் இரவா காதல் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன