அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டித்தார் மாத்தா !
விளையாட்டு

மென்செஸ்டர் யுனைடெட்டில் ஒப்பந்தத்தை நீட்டித்தார் மாத்தா !

மென்செஸ்டர், ஜூன்.20

மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் அதன் மத்திய திடல் ஆட்டக்காரர் ஜூவான் மாத்தா தனது ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார்.வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் அவரின் ஒப்பந்தம் நிறைவடையவிருந்த வேளையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்த நீட்டிப்பை மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் வழங்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டு வரை மென்செஸ்டர் யுனைடெட்டில் நீடிக்கும் அதேவேளை, மேலும் ஓராண்டு தமது ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விளையாடி வரும் தாம் தொடர்ந்து அந்த கிளப்பிற்கு சேவையாற்ற தயாராக இருப்பதாக மாத்தா கூறினார்.

மென்செஸ்டர் யுனைடெட் தற்போது ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளது. எனினும் இந்த நிலையில் இருந்து மென்செஸ்டர் யுனைடெட்டை, நிர்வாகி ஒலே குன்னர் சோல்ஜ்ஸ்கரால் மீட்டெடுக்க முடியும் என மாத்தா நம்பிக்கைத் தெரிவித்தார். சோல்ஜ்ஸ்கர் மற்றும் அவரின் குழு கொண்டிருக்கும் திட்டங்கள் தமக்கு வியப்பை ஏற்படுத்துவதாகவும் மாத்தா கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன