அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > புஸ்காஸ் தரத்திலான கோலை அடித்தார் பகாங் ஆட்டக்காரர் !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

புஸ்காஸ் தரத்திலான கோலை அடித்தார் பகாங் ஆட்டக்காரர் !

கோலாலம்பூர், ஜூன்.23 –

மலேசிய எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பகாங், பேரா அணிகள் மோதின. டாரூல் மக்மூர் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் பகாங் 3 – 1 என்ற கோல்களில் பேராவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பகாங் தற்காப்பு ஆட்டக்காரர் ஹெரோல்ட் கோலோன் அடித்த மூன்றாவது கோல் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் பகாங் அணியின் முதல் கோலை ஹெரோல்ட் கோலோன் போட்டார். 39 ஆவது நிமிடத்தில் மாஹ்மோடே சுமாரே இரண்டாவது கோலை அடித்தார். தீபன் மூலம் பேரா அணி ஒரு கோலைப் போட்டிருந்தாலும், ஹெரோல்ட் கோலோன் போட்ட கோல் பேராவின் தோல்வியை உறுதிப்படுத்தியது.

பகாங் அணிக்கு கிடைத்த ஒரு பிரீ கீக் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஹெரோல்ட் கோலேன், நடு திடலில் இருந்து அடித்த பந்து நேரே பேரா கோல் கம்பத்தினுள் நுழைந்தது. இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் பினாங்கின் பைஸ் சுப்ரி அடித்த ப்ரீ கீக்  கோல், ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை வென்றது. அதேபோல், ஹெரோல்ட் கோலேன் அடித்த கோலும் அத்தகைய விருதைப் பெறும் என மலேசிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன