அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இத்தாலியின் யுவன்டசில் இணைகிறார் மாத்திஸ் டி லைட் !
விளையாட்டு

இத்தாலியின் யுவன்டசில் இணைகிறார் மாத்திஸ் டி லைட் !

ரோம், ஜூன்.23 –

கோடைக் காலத்தில் பல முன்னணி ஐரோப்பிய கிளப்புகள் வலை வீசி வரும் நெதர்லாந்தின் மாத்திஸ் டி லைட், இத்தாலியின் யுவன்டசில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளதாக இத்தாலியின் ஸ்கை தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் கிளப்பில் இருந்து டி லைட்டை வாங்க, யுவன்டஸ் 6 கோடியே 20 லட்சம் பவுண்ட் ஸ்டேர்லிங் தொகையைக் கொடுக்க முன் வந்துள்ளது.

யுவன்டசின் புதிய பயிற்றுனர் மவ்ரிசியோ சாரி, வாங்கும் முதல் ஆட்டக்காரராக மாத்திஸ் டி லைட் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பருவத்தில் ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாம், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் வரை முன்னேற, 19 வயதான மாத்திஸ் டி லைட் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

டி லைட்டை வாங்க ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், பார்சிலோனா, இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் ஆகிய கிளப்புகள் ஆர்வம் தெரிவித்திருந்தன.எனினும் டி லைட், இத்தாலியின் யுவன்டசை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது யுவன்டஸ் அணியில் இணையுமாறு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன