அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஒன்பது பெட்டிகளை கொண்ட மதுபானங்கள் பறிமுதல்   -இருவர் கைது.
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஒன்பது பெட்டிகளை கொண்ட மதுபானங்கள் பறிமுதல்   -இருவர் கைது.

போட்டிக்சன், ஜுன் 23-

போட்டிக்சனில் வர்த்தக மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒன்பது பெட்டிகளை கொண்ட மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்தனர்.

போட்டிக்சனில்  உள்ள மளிகைக் கடைகளில்  நச்சு கலந்த மதுபானத்தை வாங்கிக் அருந்தியவர்கள்  இருவர் மாண்டதை தொடர்ந்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக  போட்டிக்சன்  போலீஸ் தலைவர் சூப்பிரண்டன் அய்டி ஷாம் முகமட் கூறினார்.

அரச மலேசிய சுங்கத் துறையின் அனுமதி இன்றி 1967 ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததன் தொடர்பில் அந்த இருவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.   1985 ஆம் ஆண்டின் உணவு விதிமுறைகளை மீறியதற்காக அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ்,  போட்டிக்சன் நகராண்மைக் கழகம், உள்நாட்டு வாணிக , பயனீட்டாளர் விவகார அமைச்சு,  மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவற்றை சேர்ந்த 46 அதிகாரிகள் இந்த சோதனை நடவடிக்கையில் பங்கேற்றதாக அய்டி ஷாம் தெரிவித்தார்.

ஜெம்போல் சவ்லிங்கில் மெத்தனோல் நச்சு இரசாயனம் கலந்த மதுவை அருந்திய கே. ராதிகா என்ற 26 வயது பெண் போட்டிக்சன் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

ஏற்கனவே திங்கட்கிழமையன்று மியன்மார்  ஆடவர் ஒருவர்  நச்சு ரசாயன மதுபானம் அருந்திய காரணத்தினால் மாண்டார்.

இத்தகைய மதுபானத்தை அருந்தியதாக நம்பப்படும் மற்றொரு நபர் சிகிச்சைக்காக துங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மெத்தனல் நச்சு ரசாயனம் கலந்த மது பானத்தை அருந்திய  ஐவர் பாதிக்கப்பட்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன