அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அம்னோ கலைக்கப்பட்டால் புதிய கட்சி அமைக்கப்படும்
அரசியல்முதன்மைச் செய்திகள்

அம்னோ கலைக்கப்பட்டால் புதிய கட்சி அமைக்கப்படும்

ஜோகூர் பாரு, ஜூன் 23-

அம்னோவை கலைக்கவேண்டிய கட்டாயமான சூழ்நிலை உருவானால் புதிய அரசியல் கட்சி அமைக்கப்படும் அல்லது நடப்பில் உள்ள அரசியல் கட்சி ஒன்றில் இணையக் கூடிய சாத்தியம் இருப்பதை அம்னோ மறுக்கவில்லை.ஜோகூர் மாநில அம்னோ தலைவர் டத்தோ ஹஸ்னி முகமட்  இதனை தெரிவித்தார்.

கட்சி எதிர்நோக்கும் நடப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இந்த துணிச்சலான முடிவை அம்னோ  எடுக்கக்கூடும் என  அவர் சொன்னார் .எம் ஏ சி சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கட்சிக்கு எதிராக சிவில் பறிமுதல்  நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதைத்  தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆக்கபூர்வமான செயல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருப்பதாக ஹஸ்னி முகமட் கூறினார்.

சிவில் பறிமுதல் திட்டம் திட்டம் எங்களுக்கு எதிராக இருப்பதால் மூன்றாவது அம்னோ 3 அமைக்க வேண்டிய சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். புதிய தளத்தில் நடப்பு போராட்டத்தை கட்சி தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகவும்  ஹஸ்னி முகமட்  சொன்னார்.

1எம்டிபி ஊழலுடன் அம்னோவுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலினால் பல்வேறு விசாரணையை எதிர்நோக்க வேண்டி இருப்பதால் அம்னோ கலக்கப்படும் சாத்தியம் இருப்பதாக ஹஸ்னி முகமட் தெரிவித்தார்.

 இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஏற்பட்டாலும் உறுப்பினர்கள் வலுவோடு இருப்பதாக  அவர் சொன்னார் . 1எம்டிபி ஊழலுடன் ஜோகூர் அம்னோவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து  அரசாங்கத்தின் விசாரணைக்கு கட்சி உள்ளானது.

 அதோடு மாநில அம்னோ தொடர்பு குழுவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன .இது தவிர சமூக சேவையில் ஈடுபட்டு வந்த பரிவு 26 குழுவின் வேன்களும் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடரும் என கூறப்பட்டுள்ளது. சிவில் பறிமுதல் நடவடிக்கையை ஆகக் கடைசியாக எம் .ஏ .சி .சி தொடங்கியிருப்பதால் அதனை எதிர்கொள்வதற்கு அம்னோ  வழக்கறிஞரை நியமிக்கும்  என்று ஹஸ்னி முகமட் தெரிவித்தார். பூலாய் அம்னோ டிவிசன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய போது அவர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் புலாய் அம்னோ டிவிசனின் தலைவரும் ஜோகூர் அம்னோ துணைத் தலைவருமான டத்தோ நூர்  ஜஸ்லானும் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன