அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஈப்போ இந்து தேவஸ்தான  தேர்தல்; முன்னாள் செயலாளர் விவேகானந்தா வெற்றி !
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஈப்போ இந்து தேவஸ்தான  தேர்தல்; முன்னாள் செயலாளர் விவேகானந்தா வெற்றி !

ஈப்போ, ஜூன் 23-

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தேர்தலில் அதன் முன்னாள் செயலாளர் எம் . விவேகனந்தா வெற்றிப் பெற்றார் .

இவருக்கு 132 வாக்குகள் கிடைத்த வேளையில் அதன் நடப்புத் தலைவரான வீ் . சுப்பையாவிற்கு 124 வாக்குகள் கிடைத்தது.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதன் நடப்பு துணைத் தலைவர்  ஆர். சீத்தாராமனுக்கு 152 வாக்குளைப் பெற்று பதவியை தக்கவைத்துக்கொண்டார். இப்பதவிக்கு போட்டியிட்ட  எம். சௌந்திரபாண்டியனுக்கு 90 வாக்குகளும் , கே. சண்முகத்திற்கு 12 வாக்குகளும் பெற்று தோல்விக்கண்டனர் .

ஆர். ஜெயசேகரன் சபாவின் புதிய செயலாளராக வெற்றிப் பெற்றார். இவருக்கு 152 வாக்குகள் கிடைத்தது. இப்பதவிக்கு  போட்டியிட்ட மாதவன் 109 வாக்குகள் பெற்று தோல்விக்கண்டார்.

துணைச் செயலளராக  எம். குமரகுரு வெற்றிப் பெற்றார் இவருக்கு  142 வாக்குகள் கிடைத்தது. இப்பதவிக்கு போட்டியிட்ட . கே. சுரேஷ்குமாருக்கு  109 வாக்குகள் கிடைத்தது.

இந்த தேர்தலை வழக்கறிஞர் மதியழகன் நடத்தினார் . இந்த தேரதல் சுமுகமான முறையில் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்றது.

நடப்பு பொருளாளர்  கே. ஆண்டாள்  பதவியை தக்கவைத்துக் கொண்டார். இவருக்கு 128 வாக்குகள் பெற்று வெற்றிக் கண்டார்  இவரை எதிர்த்த ஆர் .  ஜெயமணிக்கு 127 வாக்குகள் கிடைத்தது.

எஸ் . கிருஷ்ணன் , ஜெயராஜ் ஆகிய இருவரும் உட்கணக்காய்வாளர்களாக  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

எட்டு நிர்வாக குழு பதவிகளுக்கும் கடும் போட்டி நிலவியது. அதில் பதவிகளுக்கு 14 பேர் போட்டியிட்டனர் . அதில் டாக்டர் . சசிதரன், ஓய் . மனோகரன், நீலகந்தன், கே. சுரேன், வ. கோடைப்பிள்ளை, க. ஜெகதிசன் , கேசவன் மற்றும் கோபிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .

ஆலயத்தின் காப்பாளர்களாக  சேதுராமன், பாலசுப்பிரமணியம் மற்றும் பரமசிவம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன