ஆரம்பமாகியது பிக்பாஸ் வீட்டின் சதுரங்க ஆட்டம்! ஓர் ஆண்டின் 365 நாட்களில் 100 நாட்களை தன் வசம் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டின் ஆர்பாட்டமான நாட்கள் தொடங்கி இருக்கின்றன. பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் அறிமுக நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறியது.

வழக்கம் போல கமல்ஹாசனே தொகுத்து வழங்க, பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் ஒளிபரப்பானது. ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்திருக்கிறார்

போட்டியாளர்கள் யார் என்பது குறித்த  விவரங்கள் இது :

1.  பாத்திமா பாபு :  இவர் பிரபல  நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மூத்த செய்தி வாசிப்பாளரும் கூட .

2. லோஸ்லியா : இவர் ஒரு  மாடல் அழகி.

3. சாக்ஷி அகர்வால் :  தொலைக்காட்சி பிரபலம்

4.  மதுமிதா :  ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அறிமுகமாகி பிரபலமான காமெடி நடிகை.

5. கவின் :  விஜய் டிவி அறிவிப்பாளரும் சரவணன் மீனாட்சி சின்னத்திரை புகழ் நடிகர்.

6. அபிராமி வெங்கடாசலம் : விரைவில் திரைக்கு வரவிருக்கும் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்.

7. சரவணன் : 80 90-களில் பிரபலமான நடிகர் இவர்.  நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த பருத்திவீரன் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

8. வனிதா விஜயகுமார் :  சர்ச்சைகளுக்கும் சிக்கலுக்கும் பேர்போன,  வனிதா  ஒரு முன்னாள் நடிகையும் ஆவார்.  இவரால் பிக்பாஸில் இன்னும் சுவாரஸ்யம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

9. சேரன் : எதார்த்தமான திரைப்படங்களுக்கு சொந்தக்காரரரும் நடிகருமானவர்.

10.  ஷெரின் : தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் பிரபலமாகி விசில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

11. மோகன் வைத்தியா : இசைக் கலைஞர் , நடிகர்

12. தர்ஷன் :  விளம்பர நடிகர்

13. சேண்டி : நடன இயக்குனர்

14. முகேன் ராவ் : பிக்பாஸ் வீட்டின் முதல் மலேசியர். மண்ணின் நட்சத்திரம்.  தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராக இருந்து சில திரைப் படங்களில் நடிகராகவும் நடித்தவர். பாடகர்.  அவருக்கு மலேசியர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பது சமூக வலைத்தளங்களில் காணப்படுகிறது.

15. ரேஷ்மா :   சின்னத்திரை நடிகை

இனி இவர்களின் பின்தொடரும் வேலைகள், செய்தியாக தொடர்ந்தாலும் . நமது மண்ணின் நட்சத்திரம், இதில் உச்சம்  பெற அநேகனின் அன்பு வாழ்த்து.

ம்ம்ம்ம்… தொடங்கட்டும்! 😎 🏁