புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > யூ.பி.எஸ்.ஆர் தேர்வினை சந்திக்கவிருக்கும் மாணவர்களுக்காக இலட்சியப் பயணம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

யூ.பி.எஸ்.ஆர் தேர்வினை சந்திக்கவிருக்கும் மாணவர்களுக்காக இலட்சியப் பயணம்!

ஈப்போ, ஜூன் 25-

மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழக ஏற்பாட்டில்…இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வினை சந்திக்கவிருக்கும் மாணவர்களுக்காக ‘இலட்சிய பயணம் 2019’ என்ற தலைப்பிலான தன்முனைப்பு பட்டறை மிகச்சிறப்பாக நடந்தேறியது.

தொடர்ந்து நான்காவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பட்டறை மாணவர்களுக்கு தேர்ச்சிகளின் அவசியம், இறுதி நேர உத்வேகம், சாதனையாளர்களின் கடந்த காலம், விவேகத்துடன் உறுதி மொழியென பல்வேறு பரிமாணங்களுடன் நடைப்பெற்றது. சுமார் 70 மாணவர்கள் இதில் பங்குபெற்று பயனடைந்தனர். பள்ளியின் ஆசியிரியர் குழுவினர் மற்றும் பெற்றோர்களில் சிலரும் கூட கலந்து கொண்டனர்.

இம்முறை கழகத்தின் செயலாளர் திரு.தமிழரசன் அவர்கள் பட்டறையின் நெறியாளராக வழிநடத்தினார். ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராக பொறுப்பிலிருக்கும் டாக்டர்.மணிராஜ் அவர்கள் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும் தனியார் நிறுவனமொன்றில் உயரிய பொறுப்பிலிருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவி குமாரி.ரோஸ் ஹெலன், வீடமைப்பு விநியோக துறையில் முன்னேறி வரும் கழகத்தின் தலைவர் திரு.அருண் அவர்கள், சொந்த தொழிலில் வளர்ச்சிகண்டுள்ள கழகத்தின் ஆலோசகர் திரு.கலைசேகர் ஆகியோர் பேச்சாளர்களாக கடமையாற்றினார்.

நம் பள்ளி….நமது கடமை என்ற உணர்வில் நடத்தப்படும் இந்த தன்முனைப்பு பட்டறை மிகச் சிறந்த முயற்சியென்று பள்ளியின் தலைமையாசிரியை திருமதி மாரியம்மாள் அவர்கள் வாழ்த்தினார். இந்த நிகழ்வு நிச்சயமாக வரும் காலங்களிலும் தொடரும் என உறுதியளித்தார் இப்பள்ளியில் பயின்று தற்போது இதே பள்ளியில் துணை தலைமையாசிரியையாக பணி புரியும் திருமதி.தங்கம் அவர்கள்.

One thought on “யூ.பி.எஸ்.ஆர் தேர்வினை சந்திக்கவிருக்கும் மாணவர்களுக்காக இலட்சியப் பயணம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன