வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஷாஆலம் கோத்தா கெமுனிங்கில் திறப்பு விழா கண்டது Q பிஸ்ரோ!
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஷாஆலம் கோத்தா கெமுனிங்கில் திறப்பு விழா கண்டது Q பிஸ்ரோ!

ஷாஆலம், ஜூன் 25-
உணவக விற்பனைத்துறையில் முதன்மை நிறுவனமாக செயல்படும் Q பிஸ்ரோ தமது புதிய கிளையை ஷாஆலம் கோத்தா கெமுனிங்கில் திறந்துள்ளது.
பேரா பத்து காஜா வில் 1968 முகமட் டுல்கிஃப் சாப்பாடு கடையை அமைத்து அங்கு உள்ள வர்த்தகர்களை வெகுவாக கவர்ந்தார். சுவையான சமையல் சுகாதாரமான உணவு முறை என்பதன் அடிப்படையில் அவரின் உணவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்திய முஸ்லிம் உணவு முறைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற அவருடைய சமையல் கலைக்கு வட்டாரத்தில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. இதனால் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பிய அவர் தலைநகரை நோக்கி பயணமானார்.
1981 தொடங்கி 1984 ஆம் ஆண்டுக்குள் தலைநகரில் பல பகுதிகளில் தமது உணவு கடைகளை அவர் விரிவுபடுத்தினார். 1993-ஆம் ஆண்டு அவரது பிள்ளைகள் இத்தொழிலை கையிலெடுத்தனர். படிப்படியாக தங்களின் தொழில்களை மேம்படுத்தி மலேசியாவில் முதன்மை உணவு தயாரிப்பு நிறுவனமாக இவர்கள் வலம் வந்தனர்.
தற்போது இதனை முதல் முறையாக franchise முறையில் வர்த்தகமாக கோமன் குருப் கெபிடல் எடுத்துள்ளது. அதிகமான வாசகர்களை கவரும் நடவடிக்கையில் இந்த உணவுகளை அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமான உணவு தரமான சேவை என்ற அடிப்படையில் Q பிஸ்ரோ உணவகம் செயல்படும் என அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கூட்டரசு பிரதேச அமைச்சர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன