ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > புதிய காதல் நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியது பிக்பாஸ்!!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

புதிய காதல் நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியது பிக்பாஸ்!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொருத்தவரையில் விஜய் டிவியில் ஒளியேறும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ஆதரவை ரசிகர்கள் வழங்கி வருகிறார்கள்.

இந்த முறை இதில் மலேசிய கலைஞர்களும் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழ்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அணிவகுப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பது முதல் நாள் அரங்கேறிய காட்சிகளின் மூலம் தெளிவாக தெரிகின்றது.

முதல் பிக்பாஸில் ஓவியா ஆரவ் காதல் கதையை தொடங்கினார்கள்.அடுத்து, பிக்பாஸில் ஐஸ்வர்யாவும் ஷாரிக் காதல் செய்வது போல கூறப்பட்டது.

அதேபோல் இன்றைய பிக்பாஸில் அதே சூழ்நிலை நிலவுவதால், இது திட்டமிட்ட ஒரு செயல்முறையா? என்ற ஒரு கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கின்றது.

தொலைக்காட்சி பிரபலத்தின் மேல் இருக்கும் அந்த ஈர்ப்பு காதலாக மாறுமா என்ற கேள்வியுடன் முதல் நாள் இரவு நிறைவு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன