அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 1 எம்.டி.பி நிறுவனத்திடம் இருந்து அதிகமானோர் பணம் பெற்றுள்ளனர் – அசாம் பாக்கி !
முதன்மைச் செய்திகள்

1 எம்.டி.பி நிறுவனத்திடம் இருந்து அதிகமானோர் பணம் பெற்றுள்ளனர் – அசாம் பாக்கி !

கோலாலம்பூர், ஜூன்.26-

1 எம்.டி.பி எனப்படும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து 41 தரப்பினர் மட்டுமே பணம் பெற்றிருக்கவில்லை. மாறாக இன்னும் அதிகமானோர் பணம் பெற்றுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

எனினும் , 1 எம்.டி.பி நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றவர்கள் குறித்து மேல் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.  அந்த நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற தரப்புகள் குறித்து கடந்த வாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பகிரங்கப்படுத்தியது. 41 பெயர்கள் கொண்ட அந்த பட்டியலை ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிவித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்திப்பா கோயா, அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் அந்த 41 தரப்பினரைத் தவிர்த்து , இதர தரப்புகளும் பணம் பெற்றிருப்பதாகவும் தேவைப்பட்டால் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அசாம் பாக்கி இன்று கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதேவேளையில் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சில தரப்பினர் தாமாக முன் வந்து பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் அசாம் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன