சென்னை, ஜூன்.26- 

அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது என அமமுக மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார். தினகரனுடனான மோதலை அடுத்து தங்கதமிழ்ச் செல்வன் இன்று செய்தியாளர்களை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என்னை பற்றி வீடியோ, ஆடியோ வெளியிடுவது கட்சி தலைமை பண்புக்கு சரியல்ல.

தேர்தலில் தோல்வி என்றால் கட்சியை மக்கள் ரசிக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஒரே தோல்வி என்றாலும் பெரிய தோல்விதானே. தினகரன் பண்பாடற்றவர்.

சம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன. நான் ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும். எந்த கட்சியிலும் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. யாரும் என்னை அணுகவும் இல்லை.

பெட்டிப் பாம்பாக அடங்க வேண்டிய அவசியம் என்ன, ஒரு தலைவர் இப்படி பேசலாமா? 18 எம்எல்ஏக்கள் இல்லாவிட்டால் தினகரனே கிடையாது. ஆளுநருடன் சந்திப்பு, மேல்முறையீடு, கட்சியை மீட்பது, இரட்டை இலையை மீட்பதிலும் தினகரனுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

18 எம்எல்ஏக்களின் குடும்பத்தினரும் இன்று தவித்து வருகின்றனர். ‘ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள் என்றார்.