பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி இரண்டு நாட்களாகிவிட்டது. வந்த முதல் நாள் எல்லோர் முகத்தில் ஒரே மகிழ்ச்சியும் அன்பும் இருந்தது.தற்போது சிறு சிறு சண்டைகள், முகம் சுளிப்புகள் தொடங்கிவிட்டன.

நேற்று 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார் .மீரா மிதுனை மற்ற போட்டியாளர்கள் வரவேற்க, சாக்‌ஷியும், அபிராமியும் தனியே சென்றுவிட்டனர். இருவரும் மீரா மிதுனைப் பற்றிய பழைய கதையை வன்மத்துடன் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தற்போது, மீரா மிதுனுடன், அபிராமி, வனிதா விஜயகுமார் சண்டையிடும் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அபிராமி, மீரா மிதுனை தன்னிடம் பேச வேண்டாம் என்று கோபமாக கூறுகிறார்.

அபிராமிக்கு ஆதரவாக பேசும் வீட்டின் கேப்டன் வனிதா விஜயகுமார், உங்களுடைய பழைய கதையை பிக்பாஸ் வீட்டுக்குள் எடுத்துவர வேண்டாம் என்கிறார். அமைதியாக இருக்குமாறு மீரா கூற அதிக கோபமாகிறார் வனிதா.

இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், வீட்டுக்குள் பூகம்பம் தொடங்கவிட்டதால், வனிதா விஜயகுமார் மற்றும் அபிராமியின் சுயரூபம் வெளிவருவதாகவும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.