அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழர் தேசிய பேரறிஞர் குணாவின் ஏரணம் நூல் வெளியீட்டு விழா
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழர் தேசிய பேரறிஞர் குணாவின் ஏரணம் நூல் வெளியீட்டு விழா

ஏரணம் என்ற அளவையியலை உலகிற்கு கற்பித்தவர் அரிசுட்டாட்டில்(Aristotle) தான் என்று மேலை உலகம் சொல்கிறது. அந்த கூற்று தவறு என்பதை காட்டி, ஏரணம் என்ற அளவையியல்(logic) என்பது தமிழர்கள் உலகிற்கு தந்த கொடை என்பதை காட்டுவதற்காக வரலாற்றியல் பேரறிஞர் ஐயா குணா அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.

இந்நூலானது நாளை வரப்போகும் தமிழர் இனத்தின் மிகப்பெரும் மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றும் என்பதில் துளியும் ஐயமில்லை. வருங்காலத் தலைமுறை தமிழர்களுக்காக பேரறிஞர் குணா அவர்கள் படைத்திருக்கும் ஏரணம், தமிழர் இனத்தின் மாபெரும் அறிவுடைமைச் சொத்தாகும்.

பேரறிஞர் குணா அவர்கள் தமிழும், தமிழர் இனமும், தமிழர் இன மீட்சியும் தன் மூச்சாக கொண்டவர். தமிழரின் மொழி, அறிவு, மரபு, விஞ்ஞானம், அரசியல் என அனைத்து தளங்களிலும் மாசுபடாமல் உழைக்கின்றவர். வீழ்ச்சியிலிருந்து தமிழையும், தமிழரையும், தமிழர் மண்ணையும் மீட்டெடுக்க தன்னையே கொடையாக்கியவர்.

தனிவொருவனாய் தமிழரின மீட்சியை முன்னெடுத்து அதற்காக தன் ஆயுட்காலத்தை செலவிட்டு, தமிழ் மண் சார்ந்த ஆய்வுகள் மூலம் தமிழரின் பெருமையை உலகறியச் செய்தவர். அறியாமையிலும் இயலாமையிலும் மூழ்கிக் கிடக்கும் தமிழர்களை மீட்டெடுக்க இவர் முன்னெடுத்த பணிகள் சொல்லி மாளாது.

தமிழின மீட்சி, தமிழரின் தொன்மை, வள்ளுவத்தின் வீழ்ச்சி, எண்ணியம் என இவர் எழுதிய எண்ணற்ற நூல்கள் தமிழரின் மொழியியல், வாழ்வியல், வரலாற்றியல், அறிவியல், அரசியல் பெருமைகளை இவ்வுலகிற்கு பறைசாற்றியுள்ளது. அதன்வரிசையில் தற்போது தமிழரின் மெய்யியல் பெருநூல் “ஏரணம்” தமிழர் தேசிய இயக்கமான தமிழர் களம் மலேசியா ஏற்பாட்டில் வெளியீடு காணவுள்ளது.

தமிழர் களம் மலேசியா ஏற்பாட்டில் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.நலன் முனியாண்டி அவர்கள் ஒத்துழைப்புடன், செந்தமிழ் செல்வர் திரு.ஓம்ஸ்.தியாகராஜன் அவர்களின் தலைமையில் இந்நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 07.07.2019 ஞாயிறு, மாலை 4.00 மணியளவில் Auditorium E Library Majlis Perbandaran Klangஇல் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் கலந்துகொண்டு வரலாற்றியலும் பேரறிஞர் குணாவும் என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் தமிழன் தொலைக்காட்சி ஊடகவியலாளரான மருத்துவர் தமிழ் சிலம்பரசன் உரையாற்றவிருக்கிறார். இவ்வரலாற்றியல் பெருவிழாவுக்கு தமிழர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் தமிழர் களம் மலேசியா இயக்கத்தினர். தொடர்புக்கு : +60193260822 / +60132414615

தமிழர் வெல்வது உறுதி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன