அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > நான் உறுகாய் இல்லை – வனிதா ; அப்பா என கூப்பிடாதே – மோகன் வைத்யா
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நான் உறுகாய் இல்லை – வனிதா ; அப்பா என கூப்பிடாதே – மோகன் வைத்யா

இரண்டு நாட்களாய்  ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திய பிக்பாஸ் வீடு மீண்டும் யுத்த களமாய் மாறத் தொடங்கி இருக்கிறது.

மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது முதலே, அவருக்கும் அங்கு உள்ள பெண்களுக்கும் சின்னச் சின்னதாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதற்கெல்லாம் சேர்த்து சொர்ணா அக்காவாக மாறி வருகிறார் வனிதா விஜயகுமார் என்று மீம்ஸ்கள் ரகளையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ ஒன்றை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

அதில் வனிதாவிற்கும் மீரா மிதுனுக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டது போலவும் மீரா அதற்காக கதறி அழுவது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் நிகழ்ச்சியில் தினமும் அழுது மக்களிடையே அனுதாபத்தை பெறவே மீரா இவ்வாறு செய்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மற்றொரு ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை இனி என்னை அப்பா என கூப்பிடாதே என்று மோகன் வைத்யா பேசியது ஹவுஸ் மேட்ஸை கவலை அடைய செய்துள்ளது போல் காட்டப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கையில் பிக்பாஸ் வீடு அமைதியாக இருப்பதைக் காட்டிலும் அடிதடியுடன் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன