அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > உலக சாம்பியன்ஷிப் வெல்வதே எனது இலக்கு! அகிலன் தானி
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் வெல்வதே எனது இலக்கு! அகிலன் தானி

கோலாலம்பூர் ஜூன் 28-

மார்ஷல் ஹாட் கலையில் உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவது தான் தமது இலக்கு என்கிறார் அகிலன் தானி. இந்தியர்கள் அதிகம் ஈடுபடாத விளையாட்டுத்துறையான மாஸ்டர் ஹாட் கலையில் அகிலன் தானி மிகச்சிறந்த அடைவு நிலையை பதிவு செய்து வருகின்றார்.

உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். ஒரு நாள் எனது கனவு நனவாகும் என செய்தியாளர்களிடம் அகிலன் தெரிவித்தார். மலேசியாவில் மார்ஷல் ஹாட் வீரர்களை உருவாக்கும் மலேசிய மார்ஷியல் ஆர்ட்ஸ் ஓன் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 12, புக்கிட் ஜாலில் அக்ஸியாதா அரங்கில் நடைபெறவிருக்கின்றது.

இதன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அகிலன் தானி மேற்கண்டவாறு தெரிவித்தார். மர்சல் ஹாட் கலையில் இன்னும் பல நுணுக்கங்களை அறிந்து வருவதாகவும் உலக அரங்கில் மிகப் பெரிய சாதனையை ஏற்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளையும் தாம் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

இப்போட்டியில் தாம் கலந்து கொள்ளாவிட்டாலும் தம்மை உருவாக்கிய போட்டியில் பங்குபெறும் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க தான் வந்திருப்பதாகவும் அவர் கூறினார். ஒன் சாம்பியன்ஷிப் போட்டி நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய மார்ஷல் ஹாட் விளையாட்டாளர்கள் உருவாக்குவதற்கு இந்த போட்டி உறுதுணையாக இருக்கும் என அவர் கூறினார்.

இந்த போட்டிக்கான டிக்கெட் களுக்கும் மேல்விவரங்களுக்கும் www.onefc.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன