அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அமைச்சர் வேதமூர்த்தி தலைமையில் சிறந்த பூர்வகுடி மாணவர்கள் சிறப்பிப்பு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அமைச்சர் வேதமூர்த்தி தலைமையில் சிறந்த பூர்வகுடி மாணவர்கள் சிறப்பிப்பு

புத்ராஜெயா, ஜூன் 29-

2017, 2018-ஆம் கல்வி ஆண்டுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற  பூர்வகுடி மாணவர்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற பூர்வகுடி மாணாக்கர்கள்  நாடு முழுவதிலும் இருந்து 332 பேர் இதில் கலந்து கொண்டு அமைச்சரிடம் இருந்து சிறப்பு விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

கெப்போங், தீபகற்ப மலேசிய வனத்துறை பயிற்சிப் பிரிவின் அல்வி மண்டபத்தில் ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மாணவர்களும் உடன் வந்தவர்களும் ஊக்கம் அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன