அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பரதம் உறுதுணை புரிகிறது! -நட்டுவ  திலகம் இந்திரா மாணிக்கம்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பரதம் உறுதுணை புரிகிறது! -நட்டுவ  திலகம் இந்திரா மாணிக்கம்

கோலாலம்பூர், ஜூலை 1-

தொன்மைமிகுந்த கலைகளில் ஒன்றான பரதம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குத் துணை புரிவதோடு அவர்களை  நற்பண்புகள் நிறைந்தவர்களாகவும் உருவாக்குகிறது என்று நட்டுவ திலகம் ஸ்ரீமதி  இந்திரா மாணிக்கம் தெரிவித்தார்.

பரத கலைக்கு  முழு கவனமும், தெளிவான சிந்தனையும் தேவை. இவற்றைக்  கல்வியின் மீதும் செலுத்தும்போது அதில் மாணவர்கள் மிகச் சிறந்த நிலையை அடையலாம்  என்றார் நாட்டின் பிரசித்தி பெற்ற நாட்டிய பள்ளியான தஞ்சை கமலா இந்திரா பரதலாயத்தின் தோற்றுநரான  இந்திரா மாணிக்கம்.

“பரதக் கலையைக் கற்றுக் கொள்ளும் பிள்ளைகளின் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இத்தகைய சிறப்புகள் கொண்ட இக்கலையைப் பயில்வதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்” என்று இங்கு பிரிக்ஃபீல்ஸ்ட் கலா மண்டபத்தில் அண்மையில்  நடைபெற்ற 6 மாணவிகளின் சலங்கை பூஜை நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வி. ரூபிணி, வி. ரோகிணி, சோ. சருபினி, த. பிரியங்கா, ச. பவித்ரா மற்றும் சு. டினேஷா ஆகிய மாணவிகளின் சலங்கை பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவர்கள் அனைவரும் ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸ் ஸ்ரீ கலா நர்த்தினி கலாலய  மாணவிகள். இப்பள்ளியின் ஆசிரியர் ஸ்ரீமதி அனிதா குமாரவேலு ஆவார்.

இம்மாணவிகளின் சலங்கை பூஜை நிகழ்ச்சியில் இவர்களின் பெற்றோர்களோடு, பரதநாட்டிய ஆசிரியர்கள், சுற்று வட்டார கலை ஆர்வலர்கள் என  திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன