அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > கெந்திங் மலையில் மின்படிக்கட்டில் தீ!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கெந்திங் மலையில் மின்படிக்கட்டில் தீ!

கோலாலம்பூர் ஜூலை 2-

கெந்திங் மலையில் கெந்திங் கிரான்ட் மற்றும் .பெஸ்ட்வேல்ட் ஹோட்டலுக்கிடையே பல அடுக்கு மின்படிக்கட்டில் திடீரென தீப்பற்றியது. எனினும் இந்த தீ விபத்தில் எவரும் காயமடையவில்லை என ரிசோட் வேர்ல்டு கெந்திங் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

தீ பற்றிய அந்தப் பகுதி ஒதுக்குபுறமாக இருந்ததால் கெந்திங் உல்லாச தளத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையென கூறப்பட்டது. கெந்திங் உல்லாச தளத்தின் தீ பேரிடர் குழுவினர் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து அங்கு எவரும் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு பத்து நிமிடத்திற்குள்ளாக வருகை புரிந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.கெந்திங் மலையில் வழக்கமான நடவடிக்கை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த தீயினால் பிளாஸ்டிக் மலர்கள் வைக்கப்பட்டிருந்த நில வடிவமைப்பு பகுதியி மட்டுமே பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் துணை இயக்குனர் முகமட் சனி தெரிவித்தார். அந்த கட்டிடத்தின் 10 விழுக்காடு பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் அரை மணி நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மாலை மணி 6.13 அளவில் தகவல் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து கெந்திங் மலை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையைச் சேர்ந்த 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன