கோலாலம்பூர் ஜூலை 2-

அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்பிக்கள் , அவர்களது மனைவி மற்றும் பிள்ளைகளின் சொத்துக்களை பிரகடனப்படுத்தும் பிரேரணையை வாக்களிப்பின் மூலம் நாடாளுமன்றம் அங்கீகரித்தது .

இந்தப் பிரேரணை மீதான விவாதத்தின் முடிவின்போது வாக்களிப்பு நடத்தும்படி சபாநாயகர் டத்தோ முகமட் அரிப் முகமட் உத்தரவிட்டார். எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும் இந்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிற்பகல் முதல் மாலை 6 மணி வரை இந்தப் இந்த பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. நம்பிக்கை கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தின் போது இந்த பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.

அதே வேளையில் பாஸ் மற்றும் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது ரகசியத்தை காக்கும் அடிப்படை உரிமையை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருப்பதாக தேசிய முன்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தாஜூடீன் அப்துல் ரஹ்மான் விவாதத்தின் போது தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகள் இல்லை என்பதால் அவர்கள் குத்தகைகளை வழங்கும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.