அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > செல்சியின் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்கிறார் பிரான்க் லம்பார்ட் !
விளையாட்டு

செல்சியின் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்கிறார் பிரான்க் லம்பார்ட் !

லண்டன், ஜூலை. 2 –

செல்சி கால்பந்து அணியின் புதிய நிர்வாகியாக அதன் முன்னாள் ஆட்டக்காரர் பிரான்க் லம்பார்ட் பொறுப்பேற்கவிருக்கிறார். இன்னும் ஓரிரு தினங்களில் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டெர்பி கெளன்டி அணியின் நிர்வாகியான லம்பார்ட், திங்கட்கிழமை தொடங்கிய அவ்வணியின் பருவத்துக்கு முந்தைய பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.

இதனையடுத்து அவர் செல்சியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. செல்சி அணியுடனான ஒப்பந்தம் தொடர்பில் சில நிபந்தனைகள் முடிவு செய்யப்பட்டப் பின்னர், அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பருவத்தில் செல்சியை வழி நடத்திய  மவ்ரிசியோ சாரி, இத்தாலியின் யுவன்டசில் இணைந்ததை அடுத்து அந்த அணி தற்போது லம்பார்ட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது.

செல்சி அணியில் 13 ஆண்டுகள் விளையாடிய லம்பார்ட்,  649 ஆட்டங்களில் 211 கோல்களை அடித்துள்ளார். அதோடு மூன்று பிரீமியர் லீக் கிண்ணங்கள், ஒரு சாம்பியன்ஸ் லீக் கிண்ணம், நான்கு எப்.ஏ கிண்ணங்கள் உட்பட யூரோப்பா லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார். 2005 ஆம் ஆண்டில்  சிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கான பலோன் டி ஆர் விருதுப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன