அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பெஸ்தினோ பங்குதாரர்களின் போராட்டம்:  தீர்ப்பு ஆகஸ்ட் 15 தேதி
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பெஸ்தினோ பங்குதாரர்களின் போராட்டம்:  தீர்ப்பு ஆகஸ்ட் 15 தேதி

ஈப்போ ஜூலை 2-

பெஸ்தினோ எனும் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்துள்ள 6764 நபர்களின் போராட்டத்திற்கான தீர்ப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களில் 95 விழுக்காட்டுனர் இந்தியர்களாவர் இதில் வெ. 411 மில்லியன் பணத்தை முதலீடு செய்துள்ளனர்

அதன் முதலீடு செய்த நபர்கள் போட்டப பணத்தை மீட்க கடந்த 10 ஆண்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணத்தை மீட்க இங்குள்ள உயர் நீதி மன்றத்தில் பெஸ்தினோவின் இயக்குனர்களுக்கு எதிராக இங்குள்ள உயர் நீதி மன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 27-10-2017 இல் கூறப்பட்டது. இதில் முதலீட்டாளர்கள் தோல்விக்கண்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் அதனை ஈப்போ உயர் நீதிமன்றத்தில் மறு விசாரணை நடத்தவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று மீண்டும் இந்த வழக்கில் இரு தரப்பினர்களும் தங்களின் வாத்தத் தொகுப்பை தாக்கல் செய்தனர். இரு தரப்பினர்களின் வாத்தத் தொகுப்பை செவி மடுத்தப் பின்னர் . அந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி் ஹாசிம் ஹம்சா அறிவித்தார்.

தாரர்கள் தொடுத்த வழக்கின் தீரப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி விதிக்கப்டும் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டத்தோ ஹஷிம் ஹாம்சா அறிவித்தார். இந்த வழக்கு மறு விசாரணைக்கு நேற்று வந்தபோது இரு தரப்பினர்களும் தங்களின் வாதத் தொகுப்பினை சமர்பித்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் பங்குதாரர்கள் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் தோல்விக் கண்டனர். இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் கடந்த 27-10-2017:இல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பங்குதாரர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்தனர்

அந்த விசாரணையில் இந்த வழக்கை ஈப்போ உயர்நீதிமன்றத்தில் மறு விசாரணை நடத்தவேண்டும் தீர்ப்பு கூறப்பட்டது. இதன் தொடர்பாக நேற்று ஈப்போ உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மறு விசாரணையை செவிமடுக்க பெரும் திரளானோர் வருகை புரிந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன