செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ‘SYOK’, மலேசியாவின் புதிய வாழ்வியல் மற்றும் பொழுதுபோக்கு செயலி – எல்லாமே இருக்கு!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

‘SYOK’, மலேசியாவின் புதிய வாழ்வியல் மற்றும் பொழுதுபோக்கு செயலி – எல்லாமே இருக்கு!

கோலாலம்பூர், ஜூலை 4-

2 ஜூலை 2019 – தற்போது மலேசியாவின் புதிய வாழ்வியல் மற்றும் பொழுதுபோக்கு செயலியான SYOK-யை அனைத்து மலேசியர்களும் அணுக்கலாம். ரசிகர்களுக்குத் தொடர்ச்சியான அனைத்து ஆஸ்ட்ரோ வானொலி நிலையங்களின் ஒளிபரப்பு மற்றும் டிவி, SYOK- இன் அசல் காணொளிகள், போட்காஸ்ட், கட்டுரைகள், போட்டிகள் ஆகியவை மலாய், ஆங்கிலம் அல்லது சீன மொழி இடைமுகத்தைப் பயன்படுத்தி SYOK செயலி வாயிலாகத் தேர்ந்தெடுக்கலாம். SYOK app மற்றும் இணையதளம் வாயிலாக SYOK சேவையைப் பெறலாம்.

SYOK வாயிலாக மலேசியர்கள் 25 ஆஸ்ட்ரோ வானொலி நிலையங்களைச் எளிதாக அணுகி, அனைத்து வானொலிகளின் உள்ளடக்கங்கள் (வானொலி ஆன் டிமாண்ட்) போட்காஸ்ட்களையும், குறிப்பாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட போட்காஸ்ட்களைக் கேட்டு மகிழலாம்.

அதுமட்டுமின்றி, SYOK செயலி மலேசியர்களுக்கு SYOK அசல்கள், இன்றைய காலக்கட்டத்திற்குப் பொருத்திய சுவாரஸ்யமான மலேசிய கதைகளை உள்ளடக்கிய குறுகிய வடிவலான காணொளிகளைக் கண்டு மகிழலாம். அதை வேளையில், இச்செயலி மூலம் மலேசியர்கள் கட்டுரைகளைப் படிப்பதும் மட்டுமின்றி போட்டிகளில் கலந்து கொண்டு, பல அரிய பரிசுகளையும் நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளைத் தட்டிச் செல்லும் வாய்ப்புகளும் உள்ளன.

ஆஸ்ட்ரோ வானொலியின் மார்க்கெட்டிங் பொது மேலாளர், டாப்னே லூர்து, கூறுகையில், “SYOK செயலியை அனைத்து மலேசியர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆஸ்ட்ரோ வானொலி மகிழ்ச்சி கொள்கிறது. ரசிகர்கள் இடைவிடாத தங்களுக்குப் பிடித்த அனைத்து வானொலி பிராண்டுகளையும் இசையும் கேட்டு மகிழலாம்.

இச்செயலியில் மலேசியர்கள் உள்ளூர் காணொளிகளை அனுபவிக்கலம். அவ்வகையில் மலேசியர்களுக்காக மலேசியர்களால் உருவாக்கப்பட்ட SYOK அசல்கள் மற்றும் எங்களுடைய நேயர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் தலைப்புகள் உள்ளடக்கிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போட்காஸ்ட்கள் இச்செயலியில் பெறலாம். SYOK மூலம் மலேசியர்கள் டிஜிட்டல் வானொலியின் புதிய அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்”.

கூகுள் பிளே அல்லது ஆப் ஸ்டோர் வாயிலாக SYOK app பதிவிறக்கம் செய்யலாம் அல்லது SYOK இணையதளத்தை வலம் வருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன