புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > குற்றம் சொல்வதிலேயே குறி! மலேசிய நண்பன் நாளேட்டின் கீழறுப்பு வேலை! அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வேதனை
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

குற்றம் சொல்வதிலேயே குறி! மலேசிய நண்பன் நாளேட்டின் கீழறுப்பு வேலை! அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வேதனை

புத்ராஜெயா, ஜூலை 4-

மலேசிய நண்பன் நாளேடு, தன்னுடைய அமைச்சகத்தின்மீதும் மித்ரா மீதும் குற்றம் சொல்வதிலேயே குறியாக இருப்பதுடன், மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வ பணியை செய்யவிடாமல் தொடர்ந்து கீழறுப்புப் பணியை செய்து வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தைப் போலல்லாமல் முற்போக்குச் சிந்தனையுடன் மிகமிக நிதானமாகத் திட்டமிட்டு நான்காவது தொழில் புரட்சிக்கு ஏற்ப மலேசிய இந்திய இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களுக்கு உள்நாட்டு அளவிலும் பன்னாட்டு அளவிலும் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தவும் இளம் தொழில்முனைவர்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதற்கெல்லாம் குந்தகம் ஏற்படுத்தும் விதமாக மலேசிய நண்பன் நாளேடு எதிர்மறையான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின்மீது இந்திய சமுதாயத்திற்கு வெறுப்பு ஏற்படும் அளவிற்கு செயல்படுகிறது. இது, அப்பட்டமான கீழறுப்பு வேலையாகத் தெரிகிறது என்று தேசிய ஓற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன்தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன