செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தேர்தலில் முறைக்கேடுகளா ? மறுத்தார் டத்தோ எஸ்.எம் முத்து !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தேர்தலில் முறைக்கேடுகளா ? மறுத்தார் டத்தோ எஸ்.எம் முத்து !

கோலாலம்பூர், ஜூலை. 5- 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தேர்தலில் முறைக்கேடுகள் நடந்திருப்பதாக ஆசிய திடல் தட உயர் அடைவுநிலையின் முன்னாள் இயக்குனர் டத்தோ முஹமட் மூசாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என அச்சம்மேளனத்தின் புதிய தலைவர் டத்தோ எஸ்.எம் முத்து சாடியுள்ளார். அந்த தேர்தலைக் கண்காணிக்கும் பொறுப்பை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்த முஹமட் மூசா அதன் முடிவுகளை கேள்வி எழுப்பும் உரிமையைக் கொண்டிருக்கவில்லை என முத்து தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு செவிக் கொடுக்கமால் நாட்டின் திடல் தட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதில் மட்டுமே தாம் முழு கவனம் செலுத்தப் போவதாக முத்து மேலும் தெரிவித்தார். மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தேர்தல் தொடர்பில் விளையாட்டு ஆணையருக்கு கடிதம் எழுதவிருப்பதாகவும் முஹமட் மூசா மிரட்டியுள்ளார்.

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், இதர தரப்பினரைப் பயன்படுத்தி மிரட்டுவது என்பது சகஜம்தான் என கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.எம் முத்து தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் டத்தோ எஸ்.எம் முத்து 21 வாக்குகளைப் பெற்று மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் , நடப்பு தலைவர் டத்தோ கரீம் இப்ராஹிம்மை தோற்கடித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன