புத்ரா ஜெயா ஜூலை 5-

ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 4 காசு அதிகரித்தது. இதற்கு முன் ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 49 காசாக இருந்த ரோன் 97 பெட்ரோல் இன்று நள்ளிரவு தொடங்கி இம்மாதம் 12ம் தேதி வரை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 53 காசாக விற்கப்படும்.

எனினும் ரோன் 95 மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.தற்போது ரோன் 95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 8 காசாகவும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 18 காசாகவும் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இயல்பான விலை செயல்முறை திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 23 காசாகவும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 32 காசாகவும் உயர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் எண்ணெய் விலையை நிலைநிறுத்தி மக்களின் வாழ்க்கை செலவீன உயர்வை குறைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து ரோன் 95 மற்றும் டீசல் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கையில் கூறப் பட்டது.