அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு புலவர் சுவாமி ராமதாசர் பெயர்
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கு ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு புலவர் சுவாமி ராமதாசர் பெயர்

பினாங்கு, ஜூலை 6-

பினாங்கு மாநிலத்தில் ஜாலான் சுங்கை  தமிழ்ப்பள்ளிக்கு புலவர் சுவாமி ராமதாசர் பெயர் சூட்டப்படவிருக்கிறது.

பினாங்கு மாநிலத்தில் சுவாமி ராமதாசர் அவர்கள் தமிழ் பள்ளியின் வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை நினைவு கூறும் வகையில்  ஜாலான் சுங்கை

தமிழ்ப்பள்ளி அவரது பெயரில் செயல்படுவதற்கு அப்பள்ளியின் வாரியக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பள்ளியில் வாரிய தலைவர் டத்தோ வாமதேவன் ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தார்.

பினாங்கு வட்டாரத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் தமிழ் கல்வியின் வளர்ச்சிக்கும்  புலவர் சுவாமி ராமதாசர் அவர்கள்

சிறந்த  பங்கை ஆற்றியிருக்கிறார் என்று மலேசிய முத்தமிழ் புலவர் ராமதாச மன்ற தலைவர் பெ.க.நாராயணன் தெரிவித்தார்.

ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியின் வாரியக் கூட்டத்திலும், அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இந்த  முடிவுக்கு ஏகமனதாக இணக்கம் தெரிவித்ததாக வாமதேவன் கூறினார்.

ஜாலான் சுங்கை தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியை அஞ்சலி தேவியும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். விரைவில் பள்ளி வாரியம் பினாங்கு மாநில இரண்டாவது துணை  முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி அவர்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் எழுதவிருப்பதாகவும் வாமதேவன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு புலவர் சுவாமி ராமதாசர் பெயரை சூட்டுவது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பினாங்கு கல்வித் துறைக்கும், கல்வி அமைச்சுக்கும் டாக்டர் ராமசாமி  அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்புவார்  என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன