அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த ஒருவர்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த ஒருவர்!

பிக்பாஸ்-3 தொடங்கி பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கும் வேளையில், அதிலிருந்து ஒருவர் வெளியேறும் நாளும் வந்துவிட்டது.

தினமும் காதல், மோதல், கண்ணீர் செண்டிமெண்ட் என பல சுவாரஸ்யங்கள் அரங்கேறி வரும் நாட்களில் அறுவர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று தான் பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன், கமல்ஹாசன் மாலை அதை அறிவிப்பார்.

தற்போது சாக்‌ஷி மற்றும் பாத்திமா பாபு ஆகிய இருவரில் ஒருவர் இந்த வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரையில் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைக்கும் நபரை அத்தனை சீக்கிரம் வெளியே அனுப்பும் சூழ்நிலை இல்லை. அப்படி இருக்கையில், கவின், மீரா மற்றும் மதுமிதா போன்றவர்கள் தற்காக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

சரவணன் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் அவரால் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் அவரும் காப்பாற்றப்படலாம்.

இதில், பாத்திபா பாபு மூத்தவராக அதிக பிரச்சனைகளில் வாய் திறக்காகதது, சில விவகாரத்தில் கொஞ்சம் அதிக பிரசங்கிதனமாய் நடந்து கொண்டது போன்ற காரணங்களால் இவர் வெளியேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதேபோல், எல்லா இடங்களிலும் பிரச்சனைகளை ஊதிவிடும் சாக்‌ஷியையும் மக்கள் வெறுப்பதால் இவரும் வெளியேறுவார் என்று கணிக்கப்படுகின்றது.

இருவரில் யார் அந்த ஒருவர் என்பது மக்கள் தீர்ப்பில் இருந்தாலும்..
அந்த தீர்ப்பை விஜய் டிவி மாற்றி எழுதும் என்பதும் இங்கு மறுப்பதற்கில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன