அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கணினி குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்-டான்ஸ்ரீ லீ  லாம்  தை வலியுறுத்து
அரசியல்முதன்மைச் செய்திகள்

கணினி குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்-டான்ஸ்ரீ லீ  லாம்  தை வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 6-

சைபர் க்ரைம் எனப்படும் கணினி குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனால் ஏற்படும் பெரிய அளவிலான நிதி இழப்புக்களை கருத்தில்கொண்டு உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மலேசிய குற்றத்தடுப்பு அறநிறுவனத்தின் உதவித் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை கேட்டுக்கொண்டார்.

கடந்த 2018 ஆண்டில் கணினி குற்றங்களால் 39 கோடியே 86 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டது. கணினி குற்றச் செயல் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு கூடுதலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தேவையாகும் என கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சமூக ஆர்வலருமான லீ வலியுறுத்தினர்.

இணைய உலகில்  மனிதாபிமான பண்புகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டை  அனைத்து தரப்பினரும்  கொண்டிருக்க வேண்டும்.

 கணினி குற்றச் செயல்களில் ஈடுவோரினனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மலேசிய குற்றத்தடுப்பு அறநிறுவனம் பொது மக்களுக்கு கணினி குற்றச்செயல் விழிப்புணர்வு மீதான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 4,385 கணினி குற்றங்கள் நடந்துள்ளன. இதனால் 15 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி  இழப்பு ஏற்பட்டன.

கடந்தாண்டு  நாடு முழுவதிலும் கணினி குற்றங்களால் ஏற்பட்ட இழப்புக்களை விட இது 38 விழுக்காடு அதிகமாகும்.

இதனிடையே இவ்வாண்டு மே மாதம்  8ஆம் தேதி அமைக்கப்பட்ட மலேசிய குற்றத்தடுப்பு  அறநிறுவனத்தின் கணினி பாதுகாப்புக் குழுவின் தலைவராக மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளரான பேராசிரியர் முகமட் பவ்சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன