அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அம்பை எய்தவன் யார்? அம்பு யார்? – நாகேஷ் கிருஷ்ணன்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அம்பை எய்தவன் யார்? அம்பு யார்? – நாகேஷ் கிருஷ்ணன்

கோலாலம்பூர், ஜூலை 6-

ஓர் அமைப்பின் சார்பாக ஒருவர் செய்தி அளித்தால், எல்லா ஊடகத்துக்கும் அளிப்பதுதான் நாட்டு நடைமுறை. ஆனால், மலேசிய நண்பன் நாளேட்டிற்கு மட்டும் ஓர் அமைப்பின் தலைவர்  ஜூலை 3-ஆம் நாள் அறிக்கை கொடுத்திருக்கிறார் என்று பேராக் மாநில ஹிண்ட்ராப் தலைவர் நாகேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஓர் அண்ணனை, கேபினட் அமைச்சராக இருக்கும் சொந்தத் தம்பிக்கு எதிராக அம்பைப் போல ஏவிவிடும் விற்கலை மலேசிய நண்பன் நாளேட்டைத் தவிர  வேறு எவருக்கும் தெரியாது. இதில், அம்பாக விளங்கியது யார்? வில்லாக செயல்பட்டது யார் என்பதை திறன்மிகு வாசகர்கள் அறிவார்கள்.

இது, மலேசிய நண்பனுக்கு பாரம்பரிய குணம். துன் சாமிவேலு பதவியில் இருந்தவரை அவருக்கு எதிராக அறிக்கைவிட்டே வளர்ந்த பத்திரிகை இது. டான்ஸ்ரீ சுப்ராவை ஏவி விட்டும் தூண்டி விட்டும் அறிக்கைப் போர் நடத்தி, சமுதாயத்தில் சலசலப்பையும் மலேசிய இந்தியர்களின் அரசியல் வட்டத்தில் கதகதப்பையும் தக்கவைத்த நாளேடு இது.

அதைப்போல சாமிவேலு-டான்ஸ்ரீ பண்டிதன் சண்டையையும் சாமிவேலுவும் டத்தோ கே.பத்மாவும் மல்லுகட்டியதையும் வகையாக பிரதபலித்த நாளேடு இதுதான்.

இப்போது, அதேப் பாரம்பரிய குணத்துடன் அண்ணனை விட்டு தம்பிக்கு எதிராக அறிக்கைவிடச் சொல்லி  முதல் பக்கத்தில் பிரசுரித்து பரபரப்பாக பத்திரிகை விற்பனையை அதிகரிக்க முயற்சிக்கும் நாளேடும் இதுதான்.

எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக மித்ரா திட்டமிட்டுள்ள பயிற்சியை மலேசிய நண்பன் ஏன் சாட வேண்டும்? இது குறித்து நடுநிலையாளர்கள் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய உயர்க்கல்விச் சான்றிதழ் கல்வி என்னும் எஸ்டிபிஎம் படிப்பு முடித்ததும் அடுத்து பல்கலைக்கழக நுழைவுதான். அதனால்தான், இந்தக் கல்வி ஆண்டில் எஸ்டிபிஎம் படிக்கும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன், ஏழை இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த குறிப்பாக பி-40 பிரிவைச் சேர்ந்த எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக பிரத்தியேக வகுப்புகளை நடத்த மித்ரா திட்டமிட்டது.

இதில் என்ன குறை கண்டார்கள்? இதை ஏன் மலேசிய நண்பன் விமர்சிக்கவும் தடுக்கவும் முற்படுகிறது என்பது புரியவில்லை. இதையும் மலேசிய இந்திய மக்களின் கவனத்திற்கும் அந்த நாளேட்டிற்கு வாள் பிடிக்கும் என்.ஜி.ஓ.க்களின் பார்வைக்கும் விட்டுவிடுகிறேன்.

இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போதைய முறுகலான சூழ்நிலையைப் பயன்படுத்தி ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குளிர்காய நினைப்பது, அவரின் பிற்போக்குத் தனத்தைக் காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன