அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > வீட்டையும் காரையும் யானைகள் தாக்கின; அச்சத்தில் கிராமவாசி 
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வீட்டையும் காரையும் யானைகள் தாக்கின; அச்சத்தில் கிராமவாசி 

குளுவாங்,  ஜூலை 6-

பயங்கர சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த கிராமவாசி ஒருவர் தமது வீட்டிற்கு முன் இரண்டு யானைகள் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். குளுவாங் கம்போங் ஸ்ரீ திமோரில் தமது வீட்டிற்கு முன் இரண்டு யானைகள் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனதாக 36 வயதுடைய அபியான் கமின் என்ற கிராமவாசி தெரிவித்தார்.

அந்த யானைகள்  கார் கேரஜை  தள்ளி காரின் கூரை பகுதியையும் நாசப்படுத்தின. இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் உறைந்து போனதாக அபியான் கூறினார். விடியற்காலை ஒரு மணி அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின்போது தனது மனைவி ,மாமியார் மற்றும் இரண்டு பிள்ளைகளும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.

எங்களது குடும்பத்தின் பாதுகாப்புக்காக இறைவனை வேண்டிக் கொண்டிருந்தேன் நல்லவேளையாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் அந்த இரண்டு யானைகளும் எனது வீட்டுப் பகுதியில் இருந்து வெளியேறியது என்றார் அபியான்.

இந்த சம்பவத்தின் போது தமது கார் கூரை நொறுங்கியதாகவும் மேலும் வாழை, தென்னை மற்றும் செம்பனை மரங்களும் சேதமடைந்ததாக  அவர் தெரிவித்தார்.

12 ஆண்டு காலம் நான் இங்கு வசிக்கிறேன். முதல்முறையாக எங்களது வீட்டிற்கு முன் இப்போதுதான் யானைகளின் அட்டகாசத்தை  கண்டதாக  அபியான்  கூறினார். இந்த சம்பவத்தினால்  இதர கிராமவாசிகளும் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன