அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஜோர்ஜ்டவுன் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் பண்பாட்டு விழா! பல்லின சமுகத்தினரின் பாரம்பரியம் பறைசாற்றல்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜோர்ஜ்டவுன் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் பண்பாட்டு விழா! பல்லின சமுகத்தினரின் பாரம்பரியம் பறைசாற்றல்!

பினாங்கு, ஜூலை 7- 

பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ்டவுன் மாநகரின் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் வகையில் பல்லின சமூகத்தினரின் பாரம்பரியப் பெருமையை எடுத்துரைக்கும் பண்பாட்டு நிகழ்வு, மாநில அரசின் ஏற்பாட்டில் இங்கிருக்கும் வீதிகளில் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில்  அரங்கேறின.

உலகளாவிய நிலையில் புராதனச் சிறப்பினை ஈன்றிருக்கும் ஜோர்ஜ்டவுன் மாநகரின் புகழை அறிந்திருக்கும் உள்ளூர்வாசிகளுடன சுற்றுப்பயணிகளும் இங்கு திரளாகப் வந்துக் கலந்து கொண்டனர். பாரம்பரியப் பெருமையை எடுத்துரைக்கும் பண்பாட்டுக்  கண்காட்சிகளை இனிதே கண்டு களித்தனர்.

இதே பாணியிலான அம்சங்களைத் தாங்கி மற்ற சமூகத்தினரின் படைப்புகளும் இவ்வாண்டுகான சிறப்புடன் ஜோர்ஜ்டவுன் வரலாற்றுப் பண்பாட்டு நிகழ்வில் இடம் பெற்றிருந்த  அதே வேளையில், அவற்றின் சிறப்பம்சங்கள், பார்வையாளர்களின் பயனுக்கு ஏதுவாக செய்முறைகளுடன் எடுத்துரைக்கப்பட்டன..இந்த பண்பாட்டு விழாவில் எல்லா சமூகத்தினரின் கலாசாரக் கூறுகளை உணர்த்தும் அங்கங்களும் பரவலாக இடம் பெற்று காண்போரை பிரமிக்க வைத்தன.

ஜோர்ஜ்டவுன் மாநகர வரலாற்றுச் சிறப்பு தொடர்பில் இங்கிருக்கும் முக்கிய வீதிகளில் கோலாகலமாக நடைபெற்ற, பற்பல கலை விழாக்களும் பார்வையாளர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக சுவை சேர்த்தன.இந்த மரபியல் பண்பாட்டு விழா, மாநிலத்தின் மாநகராண்மைக் கழகத்தின் ஆதரவில் நடைபெற்றது.

சமூகக் கலாசாரக் கூறுகளை பண்பாட்டுச் சுவையுடன் வழங்கியச் சிறப்பு இந்த மரபியல் விழாவின் உன்னதப் படைப்பு என்பதால், இம்முறை 11ஆம் ஆண்டாக அனுசரிக்கப்பட்ட இதன் கோலாகலம் இங்கிருக்கும் ஏராளமானோரை எல்லையற்ற வகையில் குதூகலப்படுத்தியது.இவ்விழாவில் அனைத்து தரப்பினரும் ஆனந்தம் பருகும் ஆவலுடன், அலைகடலெனத் திரண்டு, நகர வீதிகளில் குழுமியிருந்த காட்சி, பினாங்கு மாநகரின் உன்னதச் சிறப்பினை உலகுக்கு உணர்த்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன