அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சாக்கடையில் இந்திய இளைஞரின் சடலம்; கொலையாளி சகோதரியா? போலீஸ் விசாரணை
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சாக்கடையில் இந்திய இளைஞரின் சடலம்; கொலையாளி சகோதரியா? போலீஸ் விசாரணை

தைப்பிங், ஜூலை 7-

இங்குள்ள தாமான் கிரின்வியுவில் சாக்கடை ஒன்றில் இந்திய இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவரது சடலம் ஒரு பிளாஸ்டிக் பையினால் சுற்றப்பட்டிருந்ததாகவும் இன்று பிற்பகல் 12.18 மணியளவில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டதாகவும் தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஒஸ்மான் மாமாட் தெரிவித்தார்.

16 வயதுடைய அந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் செய்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் அந்த இளைஞரின் 14 வயது சகோதரியையும் அவரது காதலரையும் போலீஸ்  கைது செய்துள்ளதாக ஒஸ்மான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் கொலைக்கான காரணத்தை போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

கொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் சடலம் சவப்பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன