அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > அடுத்த சண்டைக்கு அஸ்திவாரம் – பிக்பாஸ்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அடுத்த சண்டைக்கு அஸ்திவாரம் – பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டின் முதல் நபராக, பாத்திமா பாபு வெளியேறிய நிலையில், புதிய புரோமோ ஒன்று அடுத்து மீராவை குறிவைத்து கத்தரிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவில் மீரா மற்றும் லாஸ்லியா இருவரும் பேசிக்கொள்கின்றனர். அதில் மீரா மிதுன், லாஸ்லியாவை பார்த்து ”நான் உங்களை ஒரு தோழியாக பார்த்தது என்னோட தப்பு என்று நினைக்கிறேன்” என்று சொல்ல, அதற்கு லாஸ்லியா ”அனைவரும் எனக்கு நண்பர்கள் தான், நீங்க இப்படி நினைத்தால் அதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது”.

”உங்கள எல்லாரும் கஷ்டப்படுத்தும் போது மது உங்களுடன் இருந்தார். ஆனால் மதுவுக்கு ஒரு கஷ்டம் என்ற போது நீங்க கூட இல்லை என்று எனக்கு தோணுச்சு” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

இதனை பார்க்கும்போது, அடுத்த சண்டைக்கு பிக்பாஸ் வீடு அஸ்திவாரம் போடுவது போல இருப்பதாக கருத்து உலாவுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன